உலகம்

அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை - லெபனானில் பதற்றம்

அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை - லெபனானில் பதற்றம்

webteam

லெ‌பனானில் அரசுக்கு எதி‌‌ராக நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

பொருளாதார நெருக்கடி, வரி விதிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அந்நாட்டு பிரதமர் சாட் அல் ஹரிரி பதவி விலகினார். 

இதற்கிடையில் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள தியாகிகள் சதுக்கத்தில் திரண்ட போராட்டக்காரர்கள் சாலைகளில் ட‌யர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை ஒடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது.