உலகம்

ஜெருசலேமில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்

ஜெருசலேமில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்

webteam

ஜெருசலேம் அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேல் படைகள் மேற்கொண்டுள்ள புதிய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினமும் மசூதிக்கு வெளியே அவர்கள் வழிபாடு நடத்தினர். அப்போது, இஸ்ரேல் படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அல் அக்ஸா மசூதியில் கடந்த 14ம் தேதி நிகழ்த்தப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்கு மெட்டல் டிடெக்டரை இஸ்ரேல் படையினர் பொருத்தினர். இதற்கு பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததால், பதற்றத்தைப் போக்கும் நடவடிக்கையாக மெட்டல் டிடெக்டரை அகற்றிவிட்டு கண்காணிப்புக் காமிராக்களை இஸ்ரேல் படையினர் பொருத்தியுள்ளனர். ஆனால், இதுபோன்ற கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று பாலஸ்தீனியர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஜெருசலேமில் பதற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.