உலகம்

மெழுகுவர்த்தி தீயில் பட்ட டியோட்ரண்ட்டின் சிறு துளி: 13 வயது சிறுவனால் வெடித்து சிதறிய அறை

நிவேதா ஜெகராஜா

லண்டனில் 13 வயது சிறுவனொருவனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த அத்ரின் என்ற 13 வயது சிறுவன், தன் அறையில் வைத்து டியோட்ரண்ட் உபயோகப்படுத்தியிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு சிறிய மெழுகுவர்த்தியில் அந்த தீ பட்டிருக்கிறது. உடனடியாக பெரும் வெடிசத்தத்துடன் அந்த அறை முழுக்க தீ பரவியுள்ளது. இதில் சிறுவனுக்கு கைகள் மற்றும் வயிறுப்பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. உடன் சிறுவனிருந்த அந்தக் கட்டிடத்தின் தளம் முழுக்க நெருப்பு பரவியிருக்கிறது. சிறுவனின் வீட்டிலிருந்த கதவுகள், ஜன்னல் கதவுகள் அனைத்தும் சிதறியுள்ளது. தீயை அணைக்க, 70க்கும் மேற்பட்ட தீயனைப்பு வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் தங்கியிருந்தது அபார்ட்மெண்ட் என்பதால், அங்கிருந்த பிற வீட்டுக்காரர்கள் அனைவரும் தீயனைப்பு துறையினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அபார்ட்மெண்ட் மேல்தளத்தில் நெருப்பு புகைந்து வெடித்த காட்சி, இணையங்களில் வேகமாக பரவிவருகின்றன. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதுமில்லை என்பது மட்டுமே இதில் ஆறுதளிக்கும் விஷயமாக உள்ளது.

இந்த நிகழ்வை தொடர்ந்து டியோட்ரண்ட் உபயோகிக்கும்போது எவ்வித நெருப்பு தொடர்பான விஷயங்களையும் அருகில் வைத்திருக்க வேண்டாமென நெட்டிசன்கள் பரவலாக பதிவுசெய்துவருகின்றனர்.