உலகம்

கோவிட் -19 தோற்றம் குறித்து ஆராய 26 பேர் கொண்ட குழு: உலக சுகாதார நிறுவனம்

Veeramani

கோவிட் -19 தோற்றம் குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பு 26 பேர் கொண்ட குழுவை முன்மொழிந்துள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரஸ் அதனம் கெப்ரேயேசஸ், கொரோனா வைரஸின் மூலத்தை கண்டறிய சீனாவின் வூகான் நகரில் பணியாற்றியவர்களும் 26 பேர் குழுவில் அடங்குவர் எனத் தெரிவித்தார். தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தூண்டும் திறன் கொண்ட புதிய வைரஸ்களின் தோற்றம் இயற்கையானது என்றும் அவர் கூறினார். இந்த வரிசையில் சார்ஸ் கோவிட் - 19 சமீபத்திய வைரஸ் என்றாலும், அது கடைசியாக இருக்காது என்றும் டெட்ரஸ் குறிப்பிட்டார்.

இதே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை நிபுணரான மைக் ரியான், உலகையே நிலைகுலைய வைத்த சார்ஸ் கோவிட் - 19 வைரஸின் மூலத்தை கண்டறிய தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் 26 பேர் குழுவே கடைசியாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.