ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனை குறித்த விவரங்களை மத்திய அரசிடம் டாடா நிறுவனம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இச்செய்தி வெளிவந்துள்ளது. நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை விற்க அரசு முடிவெடுத்துள்ளது. இதை வாங்க இண்டிகோ விமான நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் டாடாவும் போட்டியில் இறங்க உள்ளதாக தெரிகிறது. 1940களில் டாடா நடத்தி வந்த டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் 1946-ல் ஏர் இந்தியா என மாற்றப்பட்டு 1953-ல் தேசியமயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.