உலகம்

“தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” - நமல் ராஜபக்ச

“தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” - நமல் ராஜபக்ச

webteam

இலங்கையில் தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களுக்கு தீர்வு காண தமது தரப்பு தயாராக உள்ளதாக பிரதமர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை நமல் இட்டுள்ளார். சிறையி‌ல் நீண்ட நாள் கைதிகளாக உள்ள போராளிகளை விடுப்பது தொடர்பாக அதிபர் மைத்ரிபா‌ல சிறிசேனவும், பிரதமர் ராஜபக்சவும் கலந்து பேசி தகுந்த முடிவை எடுப்பார்கள் என நமல் தெரிவித்துள்ளார். முன்னதாக, சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை ந‌மல் ராஜப‌க்ச சந்தித்து பேசியதாகவும் கைதிகள் 2 ‌வாரத்தில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மலையக முன்னணி தர‌ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிப்போவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது ராஜபக்சே தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ் எம்பிக்களின் ஆதரவை பெறும் கடைசி நேர முயற்சியாக நமல் ராஜபக்சவின் நடவடிக்கைகள் பார்க்கப்படுகிறது.