உலகம்

தெற்கு சூடானில் தமிழர்கள் கடத்தல்

தெற்கு சூடானில் தமிழர்கள் கடத்தல்

Rasus

தெற்கு சூடானி‌ல் எண்ணெ‌‌ய் நிறுவ‌‌‌‌னத்தில் ‌‌ப‌‌ணிபுரியு‌‌ம்‌ தமிழர்கள் இருவர்‌ கடத்தப்பட்‌டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த மிதுன் கணேஷ் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் காட்டுகடையைச் சேர்ந்த எட்வர்ட் ஆம்புரோஸ் ஆகியோர் தெற்கு சூடானில் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 8-ம் தேதி வேலைக்குச் சென்ற அவர்களை, கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தையும் கிளர்ச்சியாளர்கள், அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால், அவர்களின் பெற்றோர் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இருவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடத்தப்பட்ட மிதுன் வீட்டிற்கு இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் கடத்தப்பட்டவரை மீட்டுதர, மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என உறுதியளித்தார்.