உலகம்

”வன்முறை வேண்டாம்; பொதுமக்கள் சாகின்றனர்” - உக்ரைன் விவகாரத்தில் தாலிபன்கள் கவலை

”வன்முறை வேண்டாம்; பொதுமக்கள் சாகின்றனர்” - உக்ரைன் விவகாரத்தில் தாலிபன்கள் கவலை

கலிலுல்லா

உக்ரைன் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் ”பொது மக்களின் உயிரிழப்பு” கவலையை ஏற்படுத்துகிறது என்றும் தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு கருத்து தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு பெரும்பாலான நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்நிலையில், தலிபான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், வன்முறையிலிருந்து விலகி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் அமைதியைக் கொண்டு வாருங்கள் என தாலிபன்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு கருத்து தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மாணவர்களின் உயிரைப் பாதுகாக்குமாறு தலிபான்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தனர், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவித்தனர்.