உலகம்

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரை கைப்பற்றிய தலிபான்... காபூலை நெருங்குகிறது

jagadeesh

ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தை தலிபான் படையினர் எந்தவித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் மட்டுமே அரசின் கைவசம் இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில், அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறி வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். ஆப்கன் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றுவருகிறார்கள். பல முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள் இன்று ஜலாலாபாத் நகரை கைப்பற்றியிகுக்கிறார்கள். எந்தவித மோதலுமின்றி ஜலாலாபாத்தை கைப்பற்றியதாக தலிபான் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரமும் தலிபான்கள் வசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் நிச்சயம் காபூலை கைப்பற்ற வருவார்கள் அப்போது கடுமையான சண்டை ஏற்படும் என்றும் அரசுப் படைகள் எப்படியும் காபூலை விட்டுக்கொடுக்காது என்றும் கூறப்படுகிறது.