உலகம்

"உங்களுக்கு அவங்களே பரவாயில்லை" இந்தியாவை பாராட்டிய தலிபான் - எந்த விஷயத்தில் தெரியுமா?

Veeramani

சாப்பிட முடியாத தரம் குறைந்த கோதுமையை வழங்கியதாக பாகிஸ்தான் மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்த தலிபான் அதிகாரி, இந்தியா அனுப்பிய கோதுமையின் தரம் நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் கோதுமையின் தரம் குறித்து தலிபான் அதிகாரி புகார் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்,"பாகிஸ்தான் வழங்கிய கோதுமை உண்ணக்கூடிய தரத்தில் இல்லை, அதே நேரத்தில் நல்ல தரமான கோதுமையை அனுப்பிய இந்தியாவுக்கு நன்றி" என தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வைரலான வீடியோ பாகிஸ்தான் ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை கோபப்படுத்தியது. எனவே இந்த கருத்துக்களை தெரிவித்த தலிபான் அதிகாரி அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த மாதம், முதல் கட்டமாக இந்தியா ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக கோதுமையை அனுப்பியது. அடுத்ததாக 2000 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிச் சென்ற இரண்டாவது கப்பல், வியாழன் அன்று அமிர்தசரஸின் அட்டாரியில் இருந்து ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகருக்குப் புறப்பட்டது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘ஆப்கானிஸ்தான் மக்களுடனான தனது சிறப்பான உறவில் இந்தியா உறுதியாக உள்ளது’ என தெரிவித்த இந்திய அரசு, ஆப்கானிஸ்தான் மக்களுக்காக 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்புவதாக உறுதியளித்ததன் அடிப்படையில் இந்த கப்பல்கள் அனுப்பப்பட்டன. இந்த தானியங்கள் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தால் விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.