உலகம்

ஐ.நா.வில் பேச அனுமதிக்க வேண்டும் - தலிபான்கள் கோரிக்கை

ஐ.நா.வில் பேச அனுமதிக்க வேண்டும் - தலிபான்கள் கோரிக்கை

கலிலுல்லா

ஐக்கிய நாடுகள் பொதுக் குழுக்கூட்டத்தில் பேச அனுமதிக்குமாறு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.நா.வின் 76-வது கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸுக்கு தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகி எழுதியுள்ள கடிதத்தில், முந்தைய அதிபர் அஷ்ரப் கனியால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.நா.பிரதிநிதியை ஏற்க முடியாது என்றும் புதிய பிரதிநிதியாக முகம்மது சொகையிலை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.