உலகம்

சிறந்த பாரம்பரிய சின்னங்கள் லிஸ்ட்: தாஜ்மஹாலுக்கு 2-வது இடம்

சிறந்த பாரம்பரிய சின்னங்கள் லிஸ்ட்: தாஜ்மஹாலுக்கு 2-வது இடம்

webteam

உலக அளவில் யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய சின்னங்களில் தாஜ்மஹால் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் காதல் சின்னம் தாஜ்மஹால். உலக அதிசயங்களில் ஒன்றான இது ஆக்ராவில் இருக்கிறது. பாரம்பரிய சின்னமாக இதை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் தாஜ்மஹாலைப் பார்க்க வருகின்றனர். இந்தநிலையில் ‘டிரிப் அட்வைசர்’ என்ற ஆன்லைன் சுற்றுலா நிறுவனம், உலகிலேயே சிறந்த பாரம்பரிய சின்னங்கள் சம்பந்தமாக கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய சின்னங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில் முதல் இடத்தையும் தாஜ்மஹால் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.