உலகம்

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆசியாவில் முதல் முறையாக தைவான் ஒப்புதல்

webteam

ஆசியாவில் முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள தைவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் அதற்கான சுதந்திரமும், உரிமை உண்டு. ஓரினச் சேர்க்கையாளர்கள் இருவர் தங்கள் உறவை நிரந்தரமாக தொடர எண்ணினால் அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்துகொள்ள உரிமை உண்டு என்று தைவான் முதன்மை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தைவான் அரசின் இந்த தீர்ப்பு எல்ஜிபிடி (ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் இயக்கம்) சமூகத்தினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தைவான் நாட்டைப் பொறுத்தவரை அங்கு அதிகளவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமை வலியுறுத்தி பேரணி நடைபெற்று வருகிறது. கடந்த 30 வருடங்களாக எல்ஜிபிடி தொடர்ந்து போராடி வந்தனர். குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் தைவான் நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான சட்டத்தை 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.