சிரியாவில் வசிக்கும் குழந்தைகளுக்கு 2016-ஆம் ஆண்டு மிக மோசமான காலகட்டமாக அமைந்தது என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஓராண்டில் 652 குழந்தைகள் குண்டுவீச்சில் சிக்கி உயிரிழந்ததாகவும், அவற்றில் 255 குழந்தைகள் ஒரு பள்ளிக்கு அருகிலேயே கொல்லப்பட்டதாகவும் யுனிசெஃப் கூறியுள்ளது. களத்தில் இருந்து திரட்டப்பட்ட உறுதியான தகவல்களின் அடிப்படையிலேயே இந்தப் புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 850 குழந்தைகள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களில் தெரியவந்திருக்கிறது. சுமார் 23 லட்சம் குழந்தைகள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும், 28 லட்சம் குழந்தைகள் போர்முனைகளில் சிக்கியிருப்பதாகவும் யுனிசெஃப் கூறுகிறது.