சிரியா தலைநகர் டமாஸ்கஸில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் அல் நுஸ்ரா பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை சிரிய அரசுப் படைகள் மீட்ட போதும், டமாஸ்கஸின் தெற்குப் பகுதிகளில் அவர்களது நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் விமானப்படை மூலம் சிரிய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது.