சுவிட்சர்லாந்து வெடிவிபத்து எக்ஸ் தளம்
உலகம்

புத்தாண்டின் முதல் நாளிலேயே நிகழ்ந்த சோகம்.. சுவிட்சர்லாந்து பாரில் வெடிவிபத்து.. 10 பேர் பலி!

சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் நிகழ்ந்த வெடி விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் நிகழ்ந்த வெடி விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸின் மையத்தில் அமைந்துள்ள கிரான்ஸ்-மொன்டானா, மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள பனிச்சறுக்கு மற்றும் கோல்ஃப் போன்ற மைதானங்கள் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இது, சுவிஸ் தலைநகரான பெர்னில் இருந்து சுமார் இரண்டு மணிநேரம் தொலைவில் உள்ளது. இந்த நிலையில், கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பார் ஒன்றில், நேற்று இரவு புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்கு நூற்றுக்கணக்கானோர் கூடினர். நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர், நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது குறித்து எந்தக் காரணமும் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெனீவாவின் மையப்பகுதியில் உள்ள சுவிட்சர்லாந்தின் பழைமையான சொகுசு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதும், அதுவும் புத்தாண்டின் முதல் நாளிலேயே நிகழ்ந்திருப்பதும் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சுவிட்சர்லாந்து காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.