உலகம்

கொரோனா தடுப்பு பணிக்காக உருவாக்கப்படும் செயலி

கொரோனா தடுப்பு பணிக்காக உருவாக்கப்படும் செயலி

webteam

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த ஸ்விட்சர்லாந்து அரசு செயலி ஒன்றை உருவாக்கி வரும் நிலையில், முதல்கட்டமாக ராணுவ வீரர்கள் அதனை பயன்படுத்தி சோதனை செய்தனர்.

ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் அருகில் உள்ளவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் வகையில் ஸ்விட்சர்லாந்து அரசு செல்போன் செயலியை உருவாக்கி வருகிறது. மே 11ஆம் தேதி மக்களுக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 100 ராணுவ வீரர்களை கொண்டு செயலி பரிசோதிக்கப்பட்டது.

ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால், அவர் யாரிடமெல்லாம் தொடர்பில் இருந்தாரோ அவர்களுக்கெல்லாம் இந்த செயலி உடனே எச்சரிக்கை செய்யும்.