இன்ஸ்டாகிராம் புகழ் இளம்பெண்ணை அவரது காதலர் கொலை செய்து சூட்கேசில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்பவர் இன்ஸ்டாவில் புகழ்பெற்றவர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள எகெடெரினா தொடர்ந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருபவர். ஆனால் சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள அவரின் குடியிருப்பில் இருந்த பெரிய சூட்கேசில் எகெடெரினாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள போலீசார், ''எகெடெரினா கொலை சம்பவத்தில் அவரது முன்னாள் காவலரை கைது செய்துள்ளோம். சிசிடிவி காட்சியின் படி கொலை நடந்த அன்று எகெடெரினாவின் காதலர் சூட்கேசுடன் செல்வது தெரியவந்தது.
புதிய காதலருடன் தன் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்ட எகெடெரினாவை முன்னாள் காதலர் கொலை செய்துள்ளார். எகெடெரினாவின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. அவரது கழுத்தும் அறுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்