உலகம்

சுமத்ரான் வகை காண்டாமிருகம் அழிந்துவிட்டது மலேசிய அரசு அறிவிப்பு

jagadeesh

மலேசியாவில் சுமத்ரான் வகை காண்டாமிருகம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவின் போர்னியா தீவில் வசித்துவந்த இமான் என்ற 25 வயது நிரம்பிய பெண் காண்டாமிருகம் புற்றுநோயால் உயிரிழந்தது. இதேபோல் கடைசி ஆண் சுமத்ரான் காண்டாமிருகம் சபா கடந்த மே மாதம் இறந்தது. 

மீதமிருந்த ஒரே பெண் காண்டாமிருகமும் தற்போது உயிரிழந்துவிட்டது. எனவே தங்கள் நாட்டில் சுமத்ரான் வகை காண்டாமிருக இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக மலேசியா அரசு அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் ஆசிய கண்டம் முழுவதும் பரவலாக காணப்பட்ட சுமத்ரான் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. தற்போது வெறும் 80 காண்டாமிருகங்கள் மட்டுமே வாழ்வதாகவும் இந்தோனேஷியாவில் அவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.