உலகம்

ஆப்கனில் மனிதவெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி

ஆப்கனில் மனிதவெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி

webteam

ஆப்கானிஸ்தானில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அங்கு நடந்த அரசியல் கூட்டம் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 5 காவல்துறையினர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதும் அதன் அருகே இருந்த பொதுமக்கள் உயிர் பிழைப்பதற்காக பதறி அடித்தபடி ஓடிய காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் குண்டு வெடித்தவுடன் அதைச் சமூக வலைதளத்தில் நேரலை செய்தார்.