சிரியாவில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இந்நிலையில், அங்குள்ள நகரில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த அலெப்போ நகரை மீட்க அரசு படை கடும் போர் புரிந்து வந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்ற அரசு படையினர், சுமார் 70 பேருந்துகளை கொண்டு வந்திருந்தனர். மீட்புப் பணிக்கான பேருந்துகளை குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.