உலகம்

கொரோனா பரவலின்போதும், பாதுகாப்பாக பல நூறு நேயர்களுடன் நடந்த ஸ்பெயின் இசை நிகழ்ச்சி

கொரோனா பரவலின்போதும், பாதுகாப்பாக பல நூறு நேயர்களுடன் நடந்த ஸ்பெயின் இசை நிகழ்ச்சி

நிவேதா ஜெகராஜா

ஸ்பெயினை சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவொன்று, காற்றோட்டமான மிகப்பெரிய அறையில், 460 க்கும் மேற்பட்டோரை வைத்து, கொரோனா காலகட்டத்திலும் மிகப்பெரிய விழாக்களை நடத்தலாம் பாதுகாப்பாக நடத்துவது சாத்தியமா என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முடிவில், ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற நம்பிக்கையான முடிவு வெளிவந்துள்ளது.

ம்யூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியான இதை, லேன்செட் தொற்றுநோய் மருத்துவ இதழ்தான் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளாக, அன்றைய தினம் அங்கு பங்கேற்றவர்கள் அனைவருக்கும் 30 நிமிடங்களில் கொரோனா டெஸ்ட்டை சொல்லும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பின், அனைவருக்கும் என்-95 மாஸ்க் தரப்பட்டுள்ளது. மேலும் காற்றோட்டமான அறையில் விழாவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், சமூக இடைவெளி கடைபிடிப்பது பற்றிய அறிவுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் இருந்துள்ளது. நிகழ்ச்சிக்கு இடையில், பார்வையாளர்கள் பாடவும் ஆடவும்கூட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என்று வந்தவர்கள் - ஏற்கெனவே கொரோனா பாசிடிவ் வந்திருக்கும் ஒருவருடன் நேரடி தொடர்பு வைத்திருந்தவர்கள் - கொரோனாவுக்கான சாத்தியங்கள் அதிகமுள்ள இணை நோய்கள் இருப்பவர்கள் - வயதானவர்களுடன் தங்கி இருப்பவர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேன்டாம் எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, கடந்த டிசம்பர் 12,2020 அன்று ஸ்பெய்னின் பார்சிலோனாவின் சலா அபலோ என்ற இடத்தில் நடத்தப்பட்டுள்ளது. இங்கு, 900 பேர் வரை ஒரே நேரத்தில் கலந்துக் கொள்ளலாம். கிட்டத்ட்தட்ட ஐந்து மணி நேரம் அந்த இடத்தில் கூட்டம் இருந்துள்ளது. அதில், 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு, விழா நடந்துள்ளது. இரண்டு டி.ஜே. நிகழ்ச்சிகளும், இரண்டு இசை நிகழ்ச்சிகளும் நடந்திருக்கிறது.

ஸ்பெய்னில் அந்த நேரத்தில் தொற்று பரவல் குறைவாக இருந்திருக்கிறது. லட்சத்தில் 221 பேருக்கு மட்டுமே பாதிப்பு என்ற நிலையில்தான் அங்கு பாதிப்பு இருந்திருக்கிறது. கூடுதலாக அந்த நேரத்தில் உள்ளூர் பயணக்கட்டுப்பாடுகள், ஆறு பேருக்கு மேல் கூடக்கூடாது போன்ற வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியாக ஒரு அறையில் மது குடிக்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்திருக்கிறது. உடன், புகைப்பிடிக்கவும் அறை ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது. மது - புகைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும், 'குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் - சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்' போன்ற வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி உட்கொள்ளாதவர்கள் மட்டும், காற்றோட்டமான அந்த அறையில் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவரோடு இதில் கலந்துக்கொள்ளாத, ஆனால் அதே இடத்தில் இவர்களோடு சேர்த்து கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 495 பேரின் உடல்நலன் ஒப்பிடப்படப்பட்டுள்ளது. எட்டு நாட்களுக்கு பிறகு, அனைவரின் உடல்நலனையும் பரிசோதித்தபோது, யாருக்குமே கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த முடிவு, உலகம் முழுவதும் பாதுகாப்பாக கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இசை அல்லது வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் பிறந்துள்ளது.

'பலநூறு மக்கள் ஒரே இடத்தில் இருந்தபோதிலும், ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை' என்ற இந்த ஆய்வறிக்கை, கொரோனா வந்த பிறகு வெளிவரும் முதல் நம்பிக்கைத்தரும் ஆய்வாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஒரு ஆய்வை மட்டுமே அடிப்படையாக வைத்து நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது. ஏற்கொண்டு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றிலும் இப்படியான ஆரோக்கியமான முடிவுகள் வந்தால்தான், இம்முடிவுகள் முறையாக ஊக்குவிக்கப்படும் என இதே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லேன்செட்டின் அந்த ஆய்வு முடிவுக்கு : Lancet