உலகம்

‘ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்’ வாஷிங்டனில் ஒலித்த தமிழர்கள் குரல்!

‘ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்’ வாஷிங்டனில் ஒலித்த தமிழர்கள் குரல்!

webteam

ஸ்டெர்ட்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக் கூடாது என்றும், அத்துடன் நிரந்தரமாக மூடக்கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. ஆலையை அகற்ற கோரி தூத்துக்குடி குமரரெட்டியாபுரத்தில் 47 நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள்
நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பலரும் பங்கேற்றனர்.