(கோப்பு புகைப்படம்)
ஆப்கானிஸ்தானில் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெண் குழந்தைகளை வயதான நபர்களுக்கு திருமணம் செய்துதரும் அவலம் நிகழ்வதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.