உலகம்

அரசியல்வாதிகள் 'மெர்சல்' படம் பார்க்க வேண்டும்: இலங்கை அமைச்சர்

அரசியல்வாதிகள் 'மெர்சல்' படம் பார்க்க வேண்டும்: இலங்கை அமைச்சர்

webteam

இலங்கை அரசியல்வாதிகள் மெர்சல் படம் பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.

இதுகுறித்து இலங்கை அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கூறும்போது, அரசு மருத்துவமனைகள் வளர்ச்சிபெற வேண்டுமானால், இலங்கை அரசியல்வாதிகள் மெர்சல் படத்தை பார்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளை வளர்ச்சி பெற வேண்டுமானால், அதிபர், பிரதமர், சுகாதாரதுறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று மருத்துவம் பெற வேண்டும். அதற்கு முன்னதாக, மெர்சல் திரைப்படத்தினை பார்க்க வேண்டும் என்று கூறினார்.