சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்று இலங்கை சிறைச்சாலை மறுசீரமைப்புத்துறை அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபரில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர் குடும்பத்திற்கு புதிய வீடு கட்ட அடிக்கல் நாட்டும் விழா கொக்குவிலில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் இலங்கை சிறைச்சாலை மறுசீரமைப்புத்துறை அமைச்சர் சுவாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும், அரசியல் கைதிகள் விவகாரத்தில் இலங்கையின் நீதியமைச்சரே முடிவெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 3 தினங்களுக்கு மேலாக அனுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.