உலகம்

வளர்த்த மாணவி பிரிவால் வாடும் நாய்

வளர்த்த மாணவி பிரிவால் வாடும் நாய்

webteam

இலங்கை யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் பிரிவிலிருந்து மீள முடியாமல், அவர் வளர்த்து வந்த நாய் தவித்து வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி ஒருவரை 9 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்றம், மாணவியை கொலை செய்த சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
இந்நிலையில் மாணவியின் பிரிவை தாங்க முடியாமல், அவர் வளர்த்த நாய் வாடிவருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது முதல் தோழியாக கருதிய நாய்க்கு 'குட்டி' என பெயர் வைத்து ஆசையாகவும், பாசத்துடனும் வளர்த்து வந்துள்ளார். மாணவியின் பிரிவிற்கு பிறகு சில மாதங்கள் இந்த நாய் கவலையாகவும், சோர்வாகவும் இருந்துள்ளது. 
மாணவியின் நினைவு நாளன்று மாணவி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்த நாய், அந்த இடத்தை சுற்றி வந்து அங்கேயே நெடுநேரமாக இருந்துள்ளது. அத்துடன் மாணவியின் புகைப்படத்தை காட்டினால் பாய்ந்து வரும் நாய், அந்த படத்தையே பார்த்துக்கொண்டு தனது பாசத்தை வெளிப்படுத்துகிறது.  மனிதர்களை விட பாசம் காட்டும் நாயின் செயலால் மாணவியின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.