மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக்
குழு தெரிவித்துள்ளது.
ஜீன் லம்பேர்ட் தலைமையிலான ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று இலங்கை அரசால் வழங்கப்பட்டிருந்த உறுதி மொழி, இன்னமும் நிறைவேற்றப்படாமல்
இருப்பது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில்
முன்னேற்றம் இல்லை எனவும் அவர்கள் கூறினர். ஆனால் கடந்த முறை பயணத்தின் போது காணப்பட்ட நிலையை விட இம்முறை சிறிய அளவில்
முன்னேற்றம் மற்றும் மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.