உலகம்

மனிதன் - யானை மோதல்கள்: இலங்கையில்தான் அதிக யானைகள் உயிரிழப்பு!

webteam

மனிதன் - யானை இடையேயான மோதல்கள் காரணமாக உலக அளவில் இலங்கையில தான் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில் மனிதனும் விலங்குகளும் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர். நாகரீகம் வளர வளர மனிதன் - விலங்குகள் இடையே இடைவெளி அதிகரித்தது. அதில் பெரும்பாலான தவறுகள் மனிதன் செய்ததாக இயற்கை ஆர்வலர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட காட்டுயிர் என்றால் அது யானைகள்தான். மனிதன் அதன் வழித்தடங்களை ஆக்கிரமித்ததே யானை - மனிதன் இடையே மோதல் அதிகரித்தற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

மனிதன் - யானை இடையேயான மோதல்கள் காரணமாக உலக அளவில் இலங்கையில் தான் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதன் - யானை இடையேயான மோதல்கள் தொடர்பான புள்ளிவிவரம், COPA என்ற கமிட்டியின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்டது. யானை-மனிதன் மோதல் புள்ளிவிவரம் குறித்து பேசிய COPE கமிட்டியின் சேர்மன் திஷா விடரனா, “கடந்த 12 மாதங்களில் இலங்கையில் 407 யானைகள், யானை-மனிதன் மோதல் காரணமாக உயிரிழந்துள்ளன.

கடந்த வருடங்களில் சராசரி 272 யானைகள் என்று இருந்த நிலையில் இந்த வருடம் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், மனிதர்களின் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த வருட சராசரி 85 உயிரிழப்புகள் என்ற நிலையில் இந்த வருடம் 122 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தை மிகவும் தீவிர பிரச்னையான எடுத்துக்கொண்டுள்ள வன உயிரின ஆர்வலர்களும், அரசும்  காட்டுயிர் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கையில் எடுத்துள்ளோம்.

60 வருடங்களாக யானை-மனிதன் மோதல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த பிரச்னைக்கு சரியான தீர்வை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். மனிதன் - யானை மோதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போதாது, மக்களின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம் ” எனத் தெரிவித்தார்.