உலகம்

குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு

குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு

rajakannan

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 9 பயங்கரவாதிகளின் பெயர் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 359 பேர்‌ உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 9 பயங்கரவாதிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது. 9பேரில் மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

புகைப்படங்களில் உள்ள 9பேரும் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கின்றனர். இவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படி தொலைபேசி எண்களையும் இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.