யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியால், மாத்தளை மாவட்டத்தின் கலாவேவ நீர்த்தேக்கத்திற்கு 300-க்கும் மேற்பட்ட யானைகள் உணவைத் தேடி வருகின்றன. வறண்டுபோன குளத்தில் உள்ள புற்களைத் தின்று, யானைகள் பசியைப் போக்கிக் கொள்கின்றன. இதற்கிடையே, யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை உலகிலேயே முதலிடத்தில் இருப்பதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் இதுவரை 288 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2020 முதல் 2024 வரை, 2,000க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.. இவை அனைத்தும் வேட்டையாடுதல், ஒன்றுடன் ஒன்று மோதல்கள் மற்றும் மனித-யானை மோதல் காரணமாகவே யானைகளின் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.இதில் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுவது, விஷம் மற்றும் மின்சார வேலிகள் ஆகியவை யானைகள் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
இதில் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், யானைகளின் இறப்பு விகிதம் இப்படியே தொடர்ந்தால், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அடியோடு குறிந்து போய்விடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.