உலகம்

மட்டக்களப்பில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றம்

மட்டக்களப்பில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றம்

webteam

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணி, 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2025-ம் ஆண்டுக்குள் இலங்கை முழுவதுமுள்ள கண்ணிவெடிகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பில் இருந்த அனைத்து கண்ணிவெடி‌களும் அகற்றப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
திரிகோணமலை, மன்னார் மாவட்டங்களிலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான விளக்கக் கூட்டத்தில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன என்பது குறித்த கண்காட்சியும் இடம்பெற்றது.