உலகம்

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

webteam

பக்ரித் திருநாளை முன்னிட்டு திருப்பூரில் இஸ்லாமியர்களின் ஒரு பகுதியினர் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

சவுதியில் இன்றே பக்ரித் கொண்டாடப்படுவதால், சவுதியில் வாழும் இஸ்லாமியர்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்றே பக்ரித் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அதையடுத்து, ஜாக் என்னும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் காங்கேயம் சாலையில் உள்ள டிட்டி வளாகத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 
தொழுகை முடிந்தபின் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.