உலகம்

கேட்டலோனியா தனிநாட்டுக்கு எதிர்ப்பு: பார்சிலோனாவில் பேரணி

webteam

கேட்டலோனியா பிராந்தியம் தனி நாடாகப் பிரிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பார்சிலோனாவில் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி நடந்தது.
ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா பிரிந்து செல்வது தொடர்பாக தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இப்பேரணி நடைபெற்றுள்ளது. பேரணியில் பங்கேற்றவர்கள் ஸ்பெயின் தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். கேட்டலோனியா தேசியவாதிகள் பயன்படுத்தும் கொடியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கேட்டோலோனியா விடுதலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்கள். 
கேட்டலோனியா பிராந்தியம் தனி நாடாகப் பிரிந்து செல்வது தொடர்பான பொதுவாக்கெடுப்பு கடந்த வாரம் நடந்தது. இதில் 43 சதவிகித வாக்குகள் பதிவாகின. சுமார் 90 சதவிகிதம் பேர் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து இரு நாள்களுக்கு முன்பு கேட்டலோனியா விடுதலைக்கான பிரகடனத்தில் பிராந்தியத் தலைவர் பியூஜிமான்ட் கையெழுத்திட்டார். விடுதலை தொடர்பாக ஸ்பெயின் அரசுடன் பேச்சு நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அதிகாரப்பூர்வமாக கேட்டலோனியா தனிநாடாகப் பிரிவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே ஒருங்கிணைந்த ஸ்பெயினை வலியுறுத்துபவர்கள் ஆங்காங்கே கேட்டலோனியா பிரிவினையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.