hyundai x page
உலகம்

அமெரிக்காவில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஹூண்டாய் நிறுவனம்!

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமம், அமெரிக்காவில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

PT WEB

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமம், அமெரிக்காவில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

hyundai

வாசிங்டன் டி.சி. நகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் தலைவர் யூசுன் சுங், லூசியானா மாகாணத்தில் 5 பில்லியன் டாலர் இரும்பு ஆலை அமைக்கப்படுமென தெரிவித்தனர். அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கை கொரிய இரும்பு சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென உற்பத்தியாளர்கள் கருதும் சூழலில், அமெரிக்காவிலேயே இரும்பு ஆலையை அமைக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜார்ஜியா மாகாணத்தில் 7.59 பில்லியன் டாலர் மதிப்பிலான கார் மற்றும் பேட்டரி தொழிற்சாலையை திறக்கவும் ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.