ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்கொரியாவிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தென்கொரிய தமிழ் அமைப்புகள் சார்பில் தலைநகர் சியோலில் நடந்த இந்த போராட்டத்தில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பொங்கல் பண்டிகையின்போது நடத்த மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது தமிழகத்தில் வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.