south korea
south korea twitter
உலகம்

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முயற்சி: ஜோடிகளை நிறுத்தி தேர்ந்தெடுக்க களம் அமைத்த தென்கொரியா!

Prakash J

தென்கொரியாவில் திருமணங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால், குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில், உலகிலேயே குறைவான பிறப்பு விகிதம் கொண்ட நாடாக தென்கொரியா இருந்துள்ளது. இதை தடுக்க அந்த நாட்டின் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, குழந்தை பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்பதாக அறிவித்தும்கூட, இன்றும், தென்கொரியாவில் திருமண விகிதமும், குழந்தை பிறப்பு விகிதமும் உயரவே இல்லை.

இந்த நிலையில், தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால் பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் அந்நாடு தீவிரம் காட்டி வருகிறது. தலைநகர் சோலுக்கு அருகில் ஒரு ஹோட்டலில் இதற்காகவே ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சியோங்னம் மாநகராட்சி சார்பில், பிளைண்டு டேட்டிங் (Blind Dating) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தென்கொரிய ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். தங்களுக்கு ஏற்ற கணவர் அல்லது மனைவியைத் தேர்ந்தெடுக்க அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். இதன்மூலம் ஒருவருக்கொருவர் பழகி, அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகள் போதாது என்றும் மேலும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”உனக்கென்ன வேணும் சொல்லு” நடுவானில் விமானத்தில் மகளின் திருமணத்தை நடத்திய கோடீஸ்வரர்.. வைரல் வீடியோ!