அமெரிக்கா, தென் கொரியா, மற்றும் ஜப்பான் fb
உலகம்

வடகொரியாவிற்கு பலத்தை காட்ட... களத்தில் இறங்கிய அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான்!

சர்வதேச கடற்பரப்பில் இந்த போர் பயிற்சி நடைபெற்ற நிலையில், பிராந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும், வடகொரியா நிறுத்த வேண்டும் என மூன்று நாடுகளின் உயர் மட்ட ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

PT WEB

வடகொரியாவிற்கு தங்கள் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் விதமாக, அமெரிக்கா, தென் கொரியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, வான்வழிப் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.

அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட அமெரிக்காவின், பி-52எச் விமானமும் பயிற்சியில் பங்கேற்றது. சர்வதேச கடற்பரப்பில் இந்த போர் பயிற்சி நடைபெற்ற நிலையில், பிராந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும், வடகொரியா நிறுத்த வேண்டும் என மூன்று நாடுகளின் உயர் மட்ட ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல், இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளை நிலைகுலையச் செய்யும் நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளனர். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், வடகொரிய பயணம் மேற்கொண்டுள்ளபோது, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிற்கு, வடகொரியா ராணுவ வீரர்களையும் வழங்கி உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.