ஜப்பான் வான் வழியாக ஏவுகணை செலுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்திய வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தியது.
கொரிய தீப கற்பத்தில் உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஐ.நா. புதிய தடைகளை விதித்திருந்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் வடகொரியா செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹோக்கையிடோ தீவை கடந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.