உலகம்

தென்கொரியாவில் அதிவேகமாக பரவும் ஒமைக்ரான்

தென்கொரியாவில் அதிவேகமாக பரவும் ஒமைக்ரான்

கலிலுல்லா

தென் கொரியாவில் முன் எப்போதும் இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 741 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 741 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தென் கொரிய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. முன் எப்போது இல்லாத அளவாக உயிரிழப்பும் ஒரே நாளில் 293 ஆக பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தென் கொரிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.