உலகம்

தென்கொரியாவில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின

தென்கொரியாவில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின

webteam

தென்கொரியாவில் 5.4 ரிக்டர் அலகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. 

தென்கொரியாவின் தலைநகர் சியோல் உட்பட பல இடங்களில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. பகல் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அனைத்தும் குலுங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், தென்கிழக்கில் உள்ள தொழிற்நகரமான போஹங்கை மையமாக கொண்டு பூமிக்கு கீழே 9 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கொரிய வானியல் மையம் தெரிவித்துள்ளது. ‌அதேசமயம் இந்த நிலநடுக்கத்தால் அணு உலைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.