உலகம்

வினையானது விளையாட்டு: பாடி பில்டர் பரிதாப பலி!

வினையானது விளையாட்டு: பாடி பில்டர் பரிதாப பலி!

webteam

தலைகீழாக பல்டியடிக்க முயன்ற பாடி பில்டிங் சாம்பியன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பாடி பில்டர், சிஃபிஸ்கோ லுங்கேலோ. 75 கிலோ எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர். கடந்த சில நாட்களுக்கு முன் டர்பனில் நடந்த பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்ற இவர், அனைவரின் முன்பும் பின்பக்கமாக பல்டியடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கழுத்து தரையில் மோதி முறிந்தது. இதில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விழுந்து உயிரிழந்த வீடியோ, இணையதளங்களில் வைரலாகி வருகிறது.