உலகம்

ஆபத்தை அறியாமல் சிங்கங்களை வளர்த்த நபர் - விபரீதத்தில் முடிந்த நடைபயிற்சி

ஆபத்தை அறியாமல் சிங்கங்களை வளர்த்த நபர் - விபரீதத்தில் முடிந்த நடைபயிற்சி

Sinekadhara

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் பாதுகாவலர் வெஸ்ட் மேத்யூசன். 62 வயதான இவர் இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டிலிருந்தே எடுத்து வளர்த்து வந்திருக்கிறார். இவர் புதன்கிழமை தனது சஃபாரி லாட்ஜில் இரண்டு சிங்களையும் நடைப்பயணத்திற்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். திடீரென அந்த சிங்கங்கள் இரண்டும் அவரை தாக்கியிருக்கின்றன. அதைப் பார்த்த அவருடைய மனைவி கில் ஓடிச்சென்று அவரைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

மேத்யூசன் இந்த இரண்டு சிங்கங்களையும் வேட்டையாடுவதற்கு பதிவு செய்யப்பட்ட பகுதியிலிருந்து காப்பாற்றி கொண்டுவந்து வளர்த்திருக்கிறார். இந்த இரண்டு சிங்கங்களும் 2017ஆம் ஆண்டே இவர்களுக்கு அருகில் இருந்த ஒரு நபரைக் கொன்றதாக ஆப்பிரிக்க ஜியோகிராபிக் தெரிவித்துள்ளது.

தங்களை வளர்த்தவரையே ஏன் தாக்கின என்ற காரணம் தெரியவில்லை என்றும், மேத்யூசன் தனது வாழ்நாள் முழுவதும் இயற்கை மற்றும் வனவிலங்குகளுடன் செலவிட்டதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.