உலகம்

இந்தியாவின் முடிவை எதிர்த்து சியோலில் சிலர் போராட்டம்  

webteam

சட்டப்பரிவு 370 தை எதிர்த்து சியோலில் கோஷம், எதிர் கோஷமிட்ட பாஜக ஷாஸியா இல்மி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவின் ஷரத்துக்களை கடந்த 5 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது ஆதரவு கருத்துக்களையும் எதிர்க்கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த வெள்ளிக்கிழமை காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்ததை எதிர்த்து சிலர் போராட்டம் நடத்தினர். இவர்கள் இந்திய நாட்டையும் பிரமதர் மோடியையும் எதிர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர். 

இதனைக் கேள்விப்பட்ட பாஜகவை சேர்ந்த (Shazia Ilmi) ஷாஸியா இல்மி இரண்டு இந்தியர்களுடன் அங்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர் "ஒரு இந்தியனாக அவமதிக்கப்பட்டால் அமைதியாக போராட்டத்தை பதிவு செய்யுங்கள்" என்றார். 

ஆனால் இதைப்பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் மீண்டும் சத்தமாக கோஷமிடத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த இல்மி அவர்களை எதிர்த்து ‘இந்தியா சிந்தாபாத்’ என எதிர் கோஷமிட்டார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.