உலகம்

தேநீரை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும் மக்கள்

தேநீரை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும் மக்கள்

webteam

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பஞ்சம் தீவிரமடைந்து வருகிறது. உண்ண உணவு கிடைக்காமல், வெறும் க‌றுப்புத் தேநீரை மட்டுமே பருகி உயிர்வாழ வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஓரளவு மேம்பட்ட நிர்வாகத்தைக் கொண்டிருக்கும் சோமாலிலாந்து‌ பகுதியிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. விமானங்கள் மூலமாக வீசப்படும் உணவு மட்டுமே மக்களுக்கு ஓரளவு நம்பிக்கையளிக்கிறது. உணவு வராவிட்டால், கறுப்புத் தேநீர் மட்டுமே தங்களது உணவு என இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கிறார்கள். பால் வழங்கிக் கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் வறட்சியால் இறந்துபோய் விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அரசின் புள்ளி விவரங்களின்படி, சோமாலிலாந்தின் பொருளாதாரத்தில் கால்நடைகளே பெரும்பங்கு வகித்து வருகின்றன. தற்போதைய வறட்சியால் பெரும்பாலான கால்நடைகள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிற‌து.