உலகம்

''கொரோனாவை கட்டுப்படுத்தும் சூரிய ஒளி'' - ஆய்வில் தகவல் !

jagadeesh

சூரிய ஒளியில் கொரோனா வைரஸ் விரைவில் அழிந்து விடும் என அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸை சூரிய ஒளி எந்த வகையில் கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து அமெரிக்காவின் தேசிய BIODEFENCE பகுப்பாய்வு மையம் நடத்திய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், மேற்பரப்பு மற்றும் காற்றில் இருக்கும் கொரோனா வைரஸை சூரிய ஒளி அழிப்பதாக அந்த மையத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 21 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 20 சதவீத ஈரப்பதத்தில் 18 மணி நேரமாக உள்ள கொரோனா வைரஸின் ஆயுள், 80 சதவீத ஈரப்பதத்தை உயர்த்தும் போது 6 மணி நேரமாகக் குறைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 அந்த நிலையில் சூரிய ஒளியைச் செலுத்தும் போது இரும்பு, கதவுப்படி உள்ளிட்ட மேற்பரப்புகளில் இருக்கும் வைரஸ், வெறும் 2 நிமிடங்களிலேயே அழிந்து விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், காற்றில் இருக்கும் கொரோனா வைரஸ், சூரிய ஒளி பட்டதும் ஒன்றரை நிமிடங்களில் அழிந்து விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.