உலகம்

தென் அமெரிக்க நாடுகளில் தென்பட்ட முதல் சூரிய கிரகணம் - பார்த்து ரசித்த மக்கள்

ஜா. ஜாக்சன் சிங்

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் தென் அமெரிக்க நாடுகளில தென்பட்டது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர் கோட்டில் சந்திரன் கடப்பதே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் தென் அமெரிக்க நாடுகளில் நேற்று தென்பட்டது. சிலி நாட்டில் இந்த சூரிய கிரகணத்தை பாதுகாப்பு கண்ணாடி அணிந்தபடி மக்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். இதேபோல, பிரெசில், அர்ஜென்டினா, பெரு, வெனிசுலா, உருகுவே, பொலிவியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணம் தென்பட்டது.

அண்டார்டிக்காவில் ஒரு சில பகுதிகளிலும், பாஃல்க்லாந்து தீவுகள் உள்ளிட்ட தென் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், தெற்கு பசிஃபிக் மற்றும் தெற்கு கடல் ஆகிய பகுதிகளிலும் கிரகணம் தென்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், இது முழுமையான சூரிய கிரகணமாக இல்லாமல் பகுதியளவு கிரகணமாகவே இருந்தது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியவில்லை. இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.

நடப்பாண்டின் அடுத்த சூரிய கிரகணம் வரும் அக்டோபர் மாதம் நிகழ்கிறது. இது ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா, மேற்கு ஆசிய நாடுகளில் மட்டுமே புலப்படும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.