உலகம்

சகாரா பாலைவனத்தை சூழ்ந்த பனி : மைனஸ் 2 டிகிரி செல்சியஸுக்கு கீழ் சென்ற வெப்பம்!

EllusamyKarthik

பூலோகத்தில் மிகவும் வெப்பம் மிகுந்த பகுதி பகுதிகளில் ஒன்று சகாரா பாலைவனம்தான். ஆனால் அங்கு நிலவும் தட்பவெப்ப சூழல் காரணமாக அந்த பாலைவனம் பனியால் சூழ்ந்துள்ளது. அதனை அப்படியே தனது கேமரா கண்களில் கேப்சர் செய்துள்ளார் புகைப்படக் கலைஞர் Karim Bouchetata. 

ஆப்பிரிக்க கண்டத்தில் பறந்து விரிந்த சகாரா பாலைவனத்தில் அதிகபட்சம் 58 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை பதிவாகியுள்ளது. அப்படிப்பட்ட பாலைவனத்தில்தான் பனி சூழ்ந்துள்ளது. 

அண்மையில் அல்ஜீரியாவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள Ain Sefra பகுதியில் -2 டிகிரி செல்சியஸுக்கு கீழ் வெப்பநிலை சென்றுள்ளது. அதனால் பாலைவனத்தில் இருந்த மணல் பரப்பை அப்படியே பனி சூழ்ந்துள்ளது. அதனை கவனித்த புகைப்படக் கலைஞர் Karim Bouchetata படம் பிடித்துள்ளார். 

அட்லஸ் மலையை சூழ்ந்துள்ள இந்த பகுதியை ‘தி கேட்வே டூ தி டிஸர்ட்’ என சொல்லப்படுகிறது. இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டருக்கு மேல் அமைந்துள்ளது. இதற்கு முன்னதாகவும் இந்த பகுதியல் பனி சூழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1979, 2016, 2018 மற்றும் 2021 தொடர்ந்து ஐந்தாவது முறையாக பனி இந்த பகுதியில் சூழ்ந்துள்ளது. 

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. இந்த பாலைவனத்தில் இரவு நேரத்தில் குளிர் இருந்தாலும் காற்றில் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் பனி படர்வது அரிதான நிகழ்வு என்று சொல்லப்படுகிறது.