மலேசிய நாட்டில் உள்நாட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு கோலாலம்பூர் நகரிலிருந்து தவாவ் (Tawau) சென்று கொண்டிருந்த டொமாஸ்டிக் விமானமான ஏர் ஏசியா AK5748 விமானத்தில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. அது பயணிகளின் தலைக்கு மேல் உள்ள கேபினில் இருந்துள்ளது. அதை பயணிகள் கவனித்துள்ளனர். பின்னர் அவசரம் கருதி அந்த விமானம் சரவாக் (Sarawak) பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணியின் தலைக்கு மேல் இருந்த வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பரன்ட் பேனலில் பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை விமானத்தில் பயணித்தவர்கள் செல்போனில் வீடியோ படமாக பதிவு செய்துள்ளனர்.
தற்போது பாம்பை படம் பிடித்த அந்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. இது அரிதினும் அரிதாக அரங்கேறிய சம்பவம் என விமான பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். தகுந்த நடவடிக்கைக்கு பின்னர் அந்த விமானம் தவாவ் புறப்படும் எனவும் விமான கேப்டன் தெரிவித்துள்ளார்.