அமெரிக்காவில் ஒருவர் பேஸ்புக் பயன்படுத்தியமைக்காக அவரை, பெண் ஒருவர் அறைவிட்ட வைரல் வீடியோவுக்கு தனது ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளார் டெஸ்ட் நிறுவனர் எலான் மஸ்க்.
சான் பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்த பிளாகரும், PAVLOK ஃபிட்னெஸ் பேண்ட் நிறுவனருமான மணீஷ் ஷெத்தி தான், பெண்ணிடம் அறை வாங்கிய நபர் என தெரியவந்துள்ளது. அதுவும் அந்த பெண்ணை தன்னை அறைவதற்காகவே பணியில் அமர்த்தியுள்ளார் மணீஷ்.
மணீஷ் பேஸ்புக் பயன்படுத்தும் போதெல்லாம் அவரை அறைவது தான் அந்த பெண்ணின் பணி. அதற்காகவே தனது நாற்காலிக்கு பக்கத்தில் அந்த பெண்ணுக்கு நாற்காலியும் போட்டுக் கொடுத்துள்ளார் அவர். அப்படி ஒருநாள் மணீஷ், பேஸ்புக் பயன்படுத்த அதை பார்த்த அந்த பெண் அறை விட்டுள்ளார். அந்த வீடியோவை தான் மஸ்க் பார்த்துவிட்டு ‘தீ’ ஸ்மைலியை அதற்கு ரிப்ளையாக கொடுத்து ரியாக்ட் செய்துள்ளார்.
இந்த பணிக்காக ஒரு மணி நேரத்திற்கு அந்த பெண்ணுக்கு 8 அமெரிக்க டாலர்களை சம்பளமாக கொடுத்து வருகிறார் மணீஷ் என்பதும் தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணை பணிக்கு அமர்த்திய பிறகு தான் தனது புராடெக்ட்டிவிட்டி அதிகரித்துள்ளதாகவும் மணீஷ் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அவர் இந்த அறை வாங்கும் வழக்கத்தை கடைபிடித்து வந்தாலும் இப்போது தான் எலான் மஸ்கின் கவனத்தை பெற்றுள்ளது அது.
மஸ்க் ரிப்ளை தனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக மணீஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 9: வானிலை நிலவரத்தை தெளிவாக விளக்கும் பயனுள்ள செயலிகள்!